Books

குறி வைத்து அடி

 

புத்தகம்

:

குறி வைத்து அடி

வெளியீடு    

:

NCBH பதிப்பகம்

முதல் பதிப்பு

:

ஜனவரி 2020

பக்கங்கள்

:

141

விலை

:

ரூ 135

சமர்ப்பணம்

:

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

      

       போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வில் வெற்றிப்படியினை எட்டிட தேவையான வழி வகைகளை இலகுவாய் சொல்லிக்கொடுக்கும் இனிமையான புத்தகம்.

       குறி வைத்து அடி, குறி வைக்காமலும் அடி, செடி வைத்து அடி, குடிமையியல் படி, சித்திரம் பேசுதடி என்பன போன்ற 15 பாகங்கள் வாயிலாக கேள்விகளை துவைத்து எடுத்து பதில்களை தெளிவாய் பதிவிடுவது எப்படி, சோதனைகளை கடந்து சாதனை பெறுவது எப்படி என்பதைப்பற்றி எதார்த்தமான நடையில் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.

       போட்டித் தேர்வு தயாரிப்பை எளிதாக்கும் ஆறாய்ப் பெருகி ஓடும் ஆறு ஐடியாக்கள்...

       புருஸ்லீ வேகத்தில் அவர் தடிமனானவர்களை பந்தாடுவது போல, தடிமனான புத்தகங்களிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரியான விவரங்களை உருவி படிப்பது எப்படி,

       ஐந்தில் வளையாதது, ஐம்பதில் தானே வளையாது? ஐம்பது வரை வளைக்கலாம் தானே….

       பேப்பர் ஜூப்லி முதல் பிளாட்டினம் ஜூப்லி வரை கொண்டாடப்படும் வருடங்கள்...

       மருத்துவத்துறையில் நேனோ டெக்னாலஜி, கொசுவின் கூட்டுக்கண்களை விளக்கும் பேரசிட்டாலஜி, எத்திக்கல் டம்பிங், ஜீன் எடிட்டிங், ஆதார செல், கடன் கண்ணி (Debt Trap), புவியரசியியல், நாகோயா நெறிமுறை, இராபிளெஸியா, சைக்ளோட்ரான், ஓம்படைக்கிளவி, ஓசோன், பாசிட்ரான், பாணி தாணி…. என அடுக்கிக்கொண்டே போகுமளவு பல அற்புத தகவல்களை உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.

       பேட்டை படத்தின் எத்தனை சந்தோஷம்.... என்ற பாடலை கேட்டாலே புல்லரிப்பது போல பாடங்களையும்  இரசித்துப்  படிக்க சொல்லித் தரும் சிறந்த புத்தகம்.

       வெற்றி வரும் படி! குறி வைத்து அடி புத்தகம் படி.