Books

என்னை நோக்கிப் பாயும் நியூட்ரான்

புத்தக அறிமுகம்

:

என்னை நோக்கிப் பாயும் நியூட்ரான்

முதற்பதிப்பு

:

டிசம்பர் 2018

விலை

:

ரூ. 80

வெளியீடு

:

நெஸ்லிங் புக்ஸ் பப்ளிசிங் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (பி) லிட்.,

மொத்த பக்கங்கள்

:

92

சமர்ப்பணம்

:

வயதில் பெரியவர்களுக்கு சமர்ப்பணம்

              என்னை நோக்கிப் பாயும் நியூட்ரான், நம் நியூட்ரான்களைத் துளைத்து நம்மை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்து அறிவியலின் உச்சசங்களை உணர உதவும் ஒரு பின் நவீனத்துவ நாவல். கருவறையில் பிறந்து கல்லறையில் மறையும் நம் வாழ்க்கையை “ரிவர்ஸ் ப்ளோ” வில் நாம் அனைவரும் வயதான நிலையில் கல்லறையில் பிறந்து படிப்படியாக வயது குறைந்து கடைசியாக அம்மாவின் கருவறையில் சென்று மறைவதாக வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர். படிப்பவர்கள் எளிதாக புரிந்துகொள்வதற்கு ஏதுவாக வருடங்களை வரிசைப்படுத்தி இருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பு.

       படிக்க படிக்க காட்சிகள் படம் பார்ப்பது போல் மனத்திரையில் அப்படியே உருவாகிறது. கி.பி. 3000 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டங்களைப் பற்றி பேசுகையிலும் உணர்ச்சி மிக்க பாரதியாரின் கவிதைகளையும், ஒப்பிடமுடியாத திருவள்ளுவரின் திருக்குறளையும் பொருத்தமாக இணைத்திருப்பது மிக அற்புதம்.

       சமைப்பது, சாப்பிடுவது, உடுத்துவது, பயணிப்பது, படிப்பது எல்லாமே மெமரி சிப், டேட்டாக்கள் என அதிநவீன தொழில்நுட்பங்களோடு கதை செல்கையிலும் அரவிந்த், ஓவியா இலக்கிய தம்பதிகளின் அழகான காதலை உணர்வுப்பூர்வமாகவும், கவிதையோடும் சொல்லியிருப்பது இரசனைக்குரியது.

       இயந்திர இனியா மேல் காதல் கொண்ட சந்தோஷ், சூட்கேசில் விளையும் நெல், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஃபீலிங் பில்டர் மிரார், “அமிக்டெலா கிட்னாப்பிங்க்”, மெக்ஸிகன் ஸ்டேன்ட் ஆஃப், ட்ரிக் ஆஃப் த டிரேட், இன்பினிட்டி லேப், நெட்டாப், கற்பனை வங்கி, ப்ராஜக்ட் ஜீவரத்னா, அற்புதமான புத்தகங்கள், போன்ற பல அரிய அறிவியல் தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள படித்து பார்க்கலாம் வாருங்கள்.